• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

திடீரென மயங்கி விழுந்த சீமான்…

Byகாயத்ரி

Apr 2, 2022

சென்னை திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்தார்.

திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கிருக்கும் குடியிருப்பை அப்புறப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.. அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுதற்காக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு வந்து ஆறுதல் கூறினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்தார்.. சந்திப்பு முடிந்த பிறகு திடீரென மயக்கமடைந்து சரிந்தார். உடனடியாக தொண்டர்கள், காவல்துறையினர் முதலுதவி அளித்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சீமானை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சீமான் மயங்கி விழுந்த சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.