பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சௌந்தரராஜன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சௌந்தரராஜன் வெட்டிகொலை செய்யப்பட்டுள்ளார்.பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்கு சௌந்தரராஜன் தண்ணீர் கொண்டு வந்தபோது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,பேருந்து நிலையத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக எஸ்பிளனமேடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சௌந்தரராஜன் வியாசர்பாடியில் 59-வது வட்ட கழக செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.