• Thu. Mar 28th, 2024

பாஜக மீது சந்தேகம் எழுப்பும் சீமான்!!

ByA.Tamilselvan

Sep 25, 2022

தமிழகத்தில் மதமோதல்களையும், கும்பல் வன்முறைகளையும் ஏற்படுத்த இந்துத்துவ இயக்கங்கள் முயற்சிக்கிறதோ என சீமான் பேச்சு
சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாத சக்திகளை உடனடியாக ஒடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நாடெங்கிலும் மதப்பூசல்கள் ஏற்பட்டபோதுகூட அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில் மதக்கலவரங்களை ஏற்படுத்துவதற்கென இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. ஒருபுறம், இசுலாமிய இயக்கங்களைக் குறிவைத்து, தேசியப் புலனாய்வு முகாமையும், அமலாக்கத்துறையும் விசாரணை, கைது என அதிகாரப்பலத்தின் மூலம் வேட்டையாடிக் கொண்டிருக்க, மறுபுறம், மாநிலம் முழுமைக்கும் 50 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தயாராகிக் கொண்டிருப்பது திட்டமிடப்பட்டச் சதியின் செயல்பாட்டு வடிவமேயாகும்.
திமுக அரசு, உயர் நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை வைக்காதுவிட்டதன் விளைவாகவே, ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணிக்கு அனுமதி பெறப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகியிருக்கும் நிலையில், மதவாதத்தை எதிர்ப்பதாகப் பேச்சளவில் மட்டும் கூறிக்கொண்டு, ஆட்சி நிர்வாகம், சட்டப்போராட்டமென செயல்பாட்டளவில் பாஜகவோடு இணங்கிப்போகும் திமுக அரசின் பாதகச்செயல் பச்சைச் சந்தர்ப்பவாதமாகும். தென்மாநிலங்களே தங்களது இலக்கென பாஜகவின் தலைவர் பெருமக்கள் கூறி வரும் நிலையில், அதற்கு அடித்தளமிடும் வகையில் தமிழகத்தில் மதமோதல்களையும், கும்பல் வன்முறைகளையும் ஏற்படுத்த இந்துத்துவ இயக்கங்கள் முயற்சிக்கிறதோ? எனும் ஐயம் வலுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *