• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தோனி வெளியிட்ட அறிவிப்பு .. ரசிகர்கள் கடும் கோபம்

ByA.Tamilselvan

Sep 25, 2022

தோனி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் வெளியிட்ட அறிவிப்பால் அவரது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 2மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பாத்த நிலையில் இந்தியாவில் மீண்டும் புதிதாக ஓரியோ பிஸ்கட்டை வெளியிட்டுள்ளார். ஓரியோ விளம்பரத்தில் நடித்து வரும் அவர் ,2011 ல் ஓரியோ விளம்பரத்தில் அறிமுகமான போது இந்திய உலககோப்பையை வென்றது. அதே போல் தற்போது ஓரியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் இந்தியா மீண்டும் உலகக்கோப்பையை வெல்லும் எனகூறினார். இதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி தோனியை விமர்சித்து வருகின்றனர்.