• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

ம.தி.மு.க.வினர் தாக்கப்பட்ட வழக்கில் சீமான் விடுதலை

ByA.Tamilselvan

Aug 25, 2022

திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினர் தாக்கப்பட்ட வழக்கில் சீமான் விடுதலை செய்யப்பட்டார்.
திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோரை வரவேற்பதில் இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சோமு உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட 14 பேர் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றம் என் 6-ல் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி சிவக்குமார் தீர்ப்பு கூறினார். இதில் குற்றம் நிரூபிக்கப்படாததால் சீமான் உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்வதாக தெரிவித்தார்.