• Thu. Apr 25th, 2024

ஆண்டிபட்டி அருகே விசப்பாம்பு கடித்த
நாயை காப்பாற்றிய மருத்துவர். பொதுமக்கள் பாராட்டு.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீரங்கபுரத்தைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் . விவசாயியான இவர் தனது தோட்டத்தில் நேற்று தனது நாயையும் அழைத்துச் சென்றிருந்தார் . காவல் பணியில் ஈடுபட்டிருந்த நாய் உரிமையாளர் அருகில் பாம்பு வந்ததை தனது மோப்ப சத்தியால் கண்டுபிடித்த நாய் ,அந்த பாம்பை குரைத்துக் கொண்டு கடித்து விரட்டியது. அப்போது பாம்பு நாயை கடித்ததையடுத்து ,சிறிது நேரத்தில் நாய் மயங்கி விழுந்தது . தன்னை காப்பாற்றி விட்டு நாய் பாம்பிடம் கடிபட்டு சுருண்டு விழுந்ததால், அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உடனடியாக ஆண்டிபட்டி கால்நடை மருத்துவமனைக்கு விவசாயி ஜெய்கணேஷ் நாயை தூக்கிக்கொண்டு வந்தார் . இதையடுத்து நேற்று நாய்க்கு உடனடியாக மருத்துவர் சிகிச்சை அளிக்க தொடங்கினார் . நாயின் வாயில் பாம்பு கடித்ததால் தாடை பற்கள் மூக்கு தொண்டை பகுதி பெருமளவு வீங்கி இருந்ததோடு மூக்கின் மூலம் சுவாசிப்பதற்கும் பெரும் சிரமப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது . இதையடுத்து விஷக்கடிக்கான மருந்தான ஆன்ட்டி ஸ்நேக் வீணம் என்ற மருந்தை மருத்துவர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான மருத்துவ குழுவினர் அளித்து குளுக்கோஸ் பாட்டில் மூலம் துணை உயிர்காப்பு மருந்துகளை ஏற்றி இரண்டு நாட்களாக தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர் . மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படுவது போல் 24 மணி நேரமும் நாய்க்கு தொடர்சிகிச்சை அளித்த நிலையில் இன்று நாய் உடல்நலம் தேறி வாய் ,முகம் ,தாடை முகப்பகுதியில் வீக்கம் குறைந்து உயிர் தப்பித்தது . இதையடுத்து நாயின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர் நாயை காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர் . நாய் தானே என விட்டுவிடாமல் நாயையும் ஒரு உயிராக பாவித்து அதை இரண்டு நாட்கள் சிரமப்பட்டு ஆண்டிபட்டி கால்நடை மருத்துவர்கள் காப்பாற்றிய சம்பவம் ஆண்டிபட்டி மக்களிடையே பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *