கூடங்குளம் கடல் எல்லை கடற்கரை பகுதியான கூத்தன்குழி லைட் ஹவுஸ் அருகே இலங்கைக்கு ரூபாய் 17,95300 மதிப்புடைய பீடி இலையை சட்ட விரோதமாக கடத்திய திருநெல்வேலி மாவட்டம் ஊர்காவல் படையில் பணிபுரிந்து வரும் ஆற்றூர், தளபதி சமுத்திரம் பகுதியை சேர்ந்த இசக்கியப்பன் வயது 23 என்பவரை கைது செய்து கண்டெய்னரில் பதுக்கி வைத்த சுமார் 2762 கிலோ பீடி இலை கட்டுகள் பறிமுதல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடவடிக்கை-மேலும் கண்டெனரை பறிமுதல் செய்து தூத்துக்குடி சுங்கத்துறை கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
