• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் – பேராசிரியர் அழகு ராஜா பழனிச்சாமி

ByA.Tamilselvan

Oct 2, 2022

தமிழகத்தில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பேராசிரியர் அழகு ராஜா பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளான தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியருக்கு மட்டும் காவல்துறை சார்பில் பாதுகாப்பு காவலர் கை துப்பாக்கியுடன் பணியாற்றிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற எந்த துறை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் வழங்கவில்லை தமிழக முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி தமிழகத்தில் உள்ள தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர், கூடுதல் செயலாளர், இணைச்செயலாளர், இயக்குனர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் (ரெகுலர்) பணியில் இருப்போர்களுக்கும் பொது இடங்களில் அவர்களின் பணியின்போது காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். அனைத்து துறைகளுக்கும் இரண்டு பேர் கொண்ட காவலர்களை துப்பாக்கியுடன் எந்த நிபந்தனையும் இன்றி தமிழக அரசு உடனே நியமனம் செய்ய வேண்டும்.
பொது இடங்களில் வாகனங்களில் செல்லும்போது யாருக்கும், இவர்கள் ஐஏஎஸ் அதிகாரி என்பது தெரிவது கிடையாது நிறைய இடங்களில், மரியாதை குறைவாக நடத்தப்படுகின்றன. இதனை எந்த ஐஏஎஸ், மாவட்ட வருவாய் அலுவலர்களும், அதிகாரிகளும் வெளியில் சொல்லுவதற்கு தயங்குகின்றனர். ஆகையால் தமிழக முழுவதும் உள்ள மேலே குறிப்பிட்டுள்ள ரேங்கின் அடிப்படையில் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் கைதுப்பாக்கியுடன், இரண்டு காவலர்கள் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் பணி பாதுகாப்பு வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .


அதிகாரிகள் ஆய்வுகள், அலுவலகம், விசாரணை என பல்வேறு பணிகளுக்கு செல்லும் போது உடன் காவலர் கை துப்பாக்கியுடன் இருக்க வழிவகை செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழக மக்களுக்காக ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும், குடும்பங்களுக்கு கூட நேரம் செலவழிக்காமல் 24 மணிநேரமும் தமிழக அரசுக்கும், பொதுமக்களுக்கும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பணி வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும் .
நேற்று நடைபெற்ற அசாதாரண சூழ்நிலை மிகவும் வருந்தத்தக்கது. நேர்மையான மாவட்ட ஆட்சியராக இருந்த R. கண்ணன் ஐஏஎஸ் அவர்கள் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று பார்க்காமல் அவர் மது அருந்தி உள்ளாரா என்று அவரை பரிசோதனை செய்துள்ளனர். ஒரு ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு முன்பு தமிழக முதலமைச்சரும், உள்துறை அமைச்சருமான தங்களின் அனுமதி பெற்று வழக்கு பதிவு செய்ய வேண்டும். மத்திய பணியாளர் தேர்வாணையம்(UPSC) நடத்திய தேர்வில் தேர்வு பெற்று ஐஏஎஸ் என்ற உயர்ந்த தகுதியுடன் இந்தியாவில் வேலை பார்க்கும் முக்கிய அதிகாரிகள் ஆவார் இந்தியாவில் உள்ள அனைத்து கேபினெட்டுகளிலும் செயலாளர்களாகவும், தமிழகத்தில் முதலமைச்சர் , மற்ற அமைச்சர்களுக்கும் செயலாளராக உள்ளனர்.
இதுபோல் காங்கிரஸ் மாநில தலைவர் கே. எஸ் அழகிரியின் பேரன் மது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாரா என்ற கேள்வி ஐஏஎஸ் அதிகாரிகளிடமும், பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் கேள்வியாக எழுந்துள்ளது? இதற்கு தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் காவல்துறை டிஜிபி ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரின் ஒப்புதலை பெற்று தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இப்போது அவர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையை கட்டாயப்படுத்தியது யார் என்பதை காவல்துறை விளக்கம் தெரிவிக்க வேண்டும்? அப்படி வழக்கு பதிவு செய்தால் இரண்டு பேர் மீது தான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். ஒருவர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்வது அரசியல் அதிகாரத்தை காண்பிக்கிறது.

இதற்கு ஒருபோதும் திராவிட மாடல் அரசின் முதல்வர். மு. க. ஸ்டாலின் துணை போக மாட்டார் என்று தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். வேண்டுமென்றே தமிழக அரசுக்கு கெட்ட பெயர்களை ஏற்படுத்த வேண்டும் என்று காவல்துறையை சேர்ந்த சிலரும், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரியும் அவருடைய கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும் குண்டர்கள் போல் செயல்பட்டுள்ளனர். இது மிகவும் கண்டித்தக்கது.
தற்போது இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையாக உள்ள அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது .
இது போன்ற சம்பவம் தமிழகத்தில் முதன்முறையாக அரங்கேறியுள்ளது என்பது மிகவும் வருந்தத்தக்கது இதுபோன்ற சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் ஏற்படா வண்ணம் தடுக்க மேலே குறிப்பிட்ட செயல்முறைகளை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் (ரெகுலர்) போன்றவர்களுக்கு பணி பாதுகாப்பாக இருக்கும்.இது போன்ற சம்பவங்களை இனி நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஐஏஎஸ் அதிகாரிகள் வெளியில் சுதந்திரமாக செயல்பட முடியும் வெளியில் வருவதற்கு தயங்காமல் பொதுமக்களிடமும் விசாரணை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு பணி பாதுகாப்பு அரணாக காவல்துறை விளங்க வேண்டும் என்ற உத்தரவை உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாகவும்,சமூக ஆர்வலர்கள் சார்பாகவும், ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பாகவும், பொது நலத்துடன் என்னுடைய சார்பாகவும் வேண்டுகோள் விடுகிறார். சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் – முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி