அதுமுகவில் இரட்டை தலைமை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இபிஎஸ் ஒரு புறமும், ஓபிஎஸ் ஒரு பக்கம் என தலைமை அந்தரத்தில் உசலாடுகிறது. இரு அணிகளாக பிரிந்து மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், இன்று சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்திலுள்ள, சேலம் புறநகர் மாவட்டம் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் மற்றும் கோட்ட செயலாளர்கள் ஆகியோருக்கான தீவிர மறைமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அலுவலகத்தில் மேல்மாடியில் நடைபெற்று வருகிறது வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி கிடையாது. மிக ரகசியமாக கூட்டம் நடைபெற்று வருகிறது.
