• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

லெஜெண்ட் சரவணன் படப் பாடலை வெளியிட்ட திரை ஜாம்பவான்கள்!

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் விளம்பர படங்களில் நடித்து வந்தார்.. தற்போது, ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை உல்லாசம் பட இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். அருளிற்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ள்ளார்.

அதிரடி சண்டைக்காட்சிகளுடன் இப்படம் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ‘தி லெஜெண்ட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மொசலோ மொசலு பாடலை, திரை ஜாம்பவான்களான இயக்குனர்கள் மணிரத்னம், ராஜமௌலி ஆகியோர் வெளியிட்டனர்.