நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே காம்பினேஷனில் பீஸ்ட் படம் உருவாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் நாளைய தினம் நடக்கவுள்ளதையடுத்து பல இடங்களில் விஜய் ரசிகர்கள் பேனர்கள் மூலம் விஜய் மீதான தங்களது விருப்பத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகரில் கேகேஎஸ்ஆருக்கு சொந்தமான ராஜலட்சுமி மற்றும் அமிர்தராஜ் திரையரங்குகளில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவிற்கான டிக்கெட்டுகள் 5 வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்த ஷோக்களுக்கான கட்டணம் 300 முதல் 400 வரை விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.