• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்

ByG.Suresh

Jul 31, 2024

சிவகங்கை 48 காலனி பகுதியில் இயங்கி வரும் கேந்திர வித்யாலயா பள்ளியில் இருந்து 18 மாணவர்களை பள்ளி வேனில் அழைத்துக் கொண்டு காளையார் கோயில் நோக்கி சென்றது. வேன் நாட்டரசன் கோட்டை அருகே பி குளத்துப்பட்டி விளக்கு வளைவில் திரும்பிய போது ஓட்டுனர் திருநாவுகரசின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த 15 மாணவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு இரு 108 ஆம்புலன்ஸில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் 2 மாணவர்கள் சிறு காயமடைந்த நிலையில் பிற மாணவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி அதிஷ்டவசமாக தப்பினர். தகவலறிந்து மருத்துவமனை முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.