• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நீலகிரியில் பேருந்து வசதி இல்லாமல் பள்ளி மாணவ மாணவிகள் அவதி..!

நீலகிரி மாவட்டத்தில், காலை நேரங்களில் சரிவர பேருந்துகள் இயக்கப்படாததால், பள்ளி மாணவ, மாணவிகளும், வேலைக்குச் செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் தாய் சோலை, கோலட்டி போன்ற பகுதிகளில், காலை நேரங்களில் பேருந்துகள் சரியாக இயக்கப்படாததால் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்கும் வேலைக்கும் சென்று வருகின்றனர். தாய் சோலை பகுதிகளில் உள்ளவர்கள் விவசாயம் மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றி தங்களது பிள்ளைகளை உயர்கல்வி பயில்வதற்காக மஞ்சூர் மற்றும் ஊட்டிக்கு பேருந்து மூலமாக காலை நேரங்களில் அனுப்பி வைக்கின்றனர.;

தொடர்ந்து இயக்கப்பட்டு வந்த ஊட்டி கிண்ணக்கொரை பேருந்து முறையாக இயக்கப்படுவதில்லை. ஒரு சில நாட்களில் பேருந்துகள் வருவதும் இல்லை. பேருந்துகள் இல்லாத நேரங்களில் வாடகை வாகனங்களை அதிகம் பணம் செலுத்தி அணுக வேண்டி உள்ளது. உதகையிலிருந்து கிண்ணக்கொரைக்கு தினம்தோறும் இரவு நேரங்களில் கிண்ணக்கொரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு மறுநாள் காலையில் ஐந்து முப்பதுக்கு மஞ்சூர் பகுதிக்கு வந்து மீண்டும் தாய்சோலை பகுதிக்குச் சென்று 8.15 மணிக்கு பள்ளி மாணவ மாணவிகள் அரசு பணிக்கு செல்வோர் பல்வேறு வேலைக்காக மஞ்சூர்ருக்கு செல்வார்கள் என பலர் பயன்பெற்று வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக பேருந்து சரியாகவும் குறித்த நேரத்திலும் இயக்கப்படாததால் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சரியாக இயக்கப்படாத பேருந்து பற்றி புகார் செய்வதற்காக ஊட்டி பிரான்ச் மேனேஜர் இடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டால் தொலைபேசியை எடுக்காமல் அலட்சியப்படுத்துகிறார் என புகார் தெரிவித்தார்கள். பள்ளி மாணவ மாணவர்களின் நலன் கருதி மீண்டும் சரியான நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது