• Fri. Dec 13th, 2024

பள்ளி மாணவர்கள் ஹாட்ரிக் உலக சாதனை

BySeenu

Nov 7, 2024

600 கணித சூத்திரங்களை 30 நிமிடத்தில் கூறி ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஹாட்ரிக் உலக சாதனை

3 வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் 600 கணித சூத்திரங்களை 30 நிமிடத்தில் கூறி உலக சாதனை நிகழ்த்தி உள்ளனர்.

இந்தியா முழுவதும் இருந்து ஸ்ரீ சைதன்யா பள்ளியை சேர்ந்த 10_000 மாணவர்கள் கலந்து கொண்ட இதில் கோவை ஸ்ரீ சைதன்யா பள்ளி சிறுவர்களும் இளம் கணித மேதைகளாக பங்கேற்று அசத்தி உள்ளனர்.

இந்தியா முழுவதும் உள்ள சுமார் 20 மாநிலங்களில் இருந்தும் சுமார் 150 ஸ்ரீ சைதன்யா பள்ளிகளில் பயிலும் 3 வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் இணைந்து கணிதத்தில் புதிய உலக சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.

நாடு முழுவதும் இருந்து சுமார் 10,000 பேர் இணையம் வாயிலாக பங்கு பெற்ற நிலையில், கோவை மாவட்டத்தில் இருந்து நீலாம்பூர்,சின்னவேடம்பட்டி,
காந்திபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீசைதன்யா பள்ளிகளின் தலைவர் பி.எஸ்.ராவ் அறிவுறுத்தலின் பேரில் சேர் பெர்சன் ஜான்சி லட்சுமி பாய் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த உலக சாதனை நிகழ்ச்சி காந்திபுரம் ஸ்ரீசைதன்யா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்,சிறுமிகள் 600 கணித சூத்திரங்களை 30 நிமிடங்களில் குழுவாக இணைந்து கூறி லண்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

சூப்பர் ஹாட்ரிக் உலக சாதனை நிகழ்வாக மாணவர்களின் புதுமையான கற்றல் மற்றும் கல்வி திறனை ஊக்குவிப்பதற்காக இந்த சாதனை நிகழ்வு நடைபெற்றதாகவும்,கணித சூத்திரங்களை 100, 200, 300 என தனித்தனியே வகைப்படுத்தி மாணவர்கள் இணைந்து இந்த சாதனையை செய்துள்ளனர்..

இந்த உலக சாதனை நிகழ்வை,பள்ளிகளின் அகாடமிக் இயக்குனர் சீமா போபண்ணா,
இயக்குனர் நாகேந்திரா, தமிழ்நாடு டி.ஜி.எம்.ஹரிபாபு,கே 5 அகாடமிக் தலைவர் புஷ்பவள்ளி, ஏ.ஜி.எம். நாகேஸ்வர ராவ், ரீஜினல் இன்சார்ஜ் பாலகிருஷ்ணன், மண்டல ஒருங்கிணைப்பாளர் சுஜித்ரா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

இது குறித்து காந்திபுரம் ஸ்ரீ சைதன்யா பள்ளியின். முதல்வர் அனீஷ் அகஸ்டின் கூறுகையில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பால் மட்டுமே இந்த சாதனை முயற்சி வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.

ஏற்கனவே புவியியல் மற்றும் பெருக்கல் அட்டவணையில் இரண்டு உலக சாதனைகள் செய்த நிலையில் தற்போது தொடர்ந்து மூன்றாவது சாதனையாக சூப்பர் ஹாட்ரிக் என கணித சூத்திரங்களை கூறுவதில் உலக சாதனை படைத்துள்ளதாக கூறினார்.