• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஜூலை 15ல் கல்வி வளர்ச்சி நாள் கடைபிடிக்க அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..!

Byவிஷா

Jul 6, 2023

ஜூலை 15ஆம் தேதி கல்வித்தந்தை காமராஜர் பிறந்ததினத்தை முன்னிட்டு, அன்றைய தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து பல போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வெளியான சுற்றறிக்கையில், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் வருடம்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த நாளில் மாணவர்கள் புது ஆடை அணிந்து விழா எடுத்து காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும். மேலும் அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி தின விழாவை சிறப்பாக கொண்டாட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓவியம், பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.