தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி டிஎன்பிஎஸ்சி மூலமாக நடத்தப்படும் சிவில் ஜட்ஜ் பதவிக்கான 245 காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்து அறிவிப்பு ஜூன் 1ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த பணிக்கு தகுதி உடைய நபர்கள் ஜூன் 30-ம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கான கட்டணம் இல்லா நேரடி பயிற்சி வகுப்புகள் ஜூலை 11ஆம் தேதி முதல் சென்னை கிண்டியில் உள்ள தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய 9499966021 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.