• Thu. Dec 5th, 2024

குரூப்-1 தேர்வுக்கான அட்டவணை வெளியீடு..

ByA.Tamilselvan

Dec 20, 2022

குரூப்-1 தேர்வுக்கான உத்தேச அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடுவது வழக்கம். அதன்படி, அடுத்த (2023) ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை கடந்த 15-ம் தேதி வெளியிட்டது.
அந்த அட்டவணையில் குருப்-1 தேர்வுக்கான அட்டவணை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது அதற்கான உத்தேச அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் குரூப்-1 முதல் நிலை தேர்வு நடத்தப்படும் என்றும், குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு 2023 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *