• Tue. Apr 30th, 2024

வலிமை வாய்ந்தவரை எதிர்த்து போட்டியிடுகிறார் சேவியர்தாஸ்..! எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை…

ByG.Suresh

Apr 9, 2024

கிளை கழக செயலாளராக பணியாற்றியவர் தற்போது சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளராக அறிமுகமாகியுள்ளார். வேட்பாளர் சேவியர் தாஸை அறிமுகப்படுத்தி எடப்பாடி பழனிசாமி காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பரப்புரை செய்து பேசினார்.

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காரைக்குடி பரப்பரை பொதுக்கூட்டத்தில் பேசும் போது..,

மேலும்,சிவகங்கை மாவட்டத்தில் வளமை வாய்ந்தவரை எதிர்த்து நமது வேட்பாளர் போட்டியிடுகிறார். ஸ்டாலின் சவால்விட்டு பச்சை பொய்யை அவிழ்த்துவிட்டு வருகிறார் என்றும், பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றும் கூறினார்.

மாநில நிதியில 14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காவேரி குண்டாறு திட்டத்தை தொடக்கிவைத்தேன். அதனை ஸ்டாலின் நிறுத்திவிட்டார் என்று குற்றம் சாட்டியவர்,
நான் ஒரு விவசாயி எனபதால் அவ்வளவு பெரிய தொகையை அத்திட்டத்திற்கு ஒதுக்கினேன் என்றும் கூறினார்.
கஜா புயலில் உடனடி நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்றியது என்னுடைய தலைமையிலான அதிமுக அரசு என்றும், ஆனால் புயல் இல்லாமல மழை பெய்ததற்கே திமுக அரசால் தாக்குபிடிக்க முடியவில்லை என்றவர், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி அதிமுக தான் என்றும் பெருமிதம் கூறினார்.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தன்னிடம் ஒரு ரகசியம் இருக்கு என்று சொன்ன ஸ்டாலின்,இதுவரை அந்த ரகசியத்தை சொல்லவே இல்லை என்று கூறி ஒரு குட்டி கதை மூலம் அதனை விளக்கினார்.
52% மின்கட்டண உயர்வு, வீட்டு வரி 100% கடைகளுக்கு வரி, தண்ணீர் வசதி குப்பை வரி, என வரிகளை போட்டு மக்களை வஞ்சித்துள்ளார் ஸ்டாலின் என்றவர், 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் 31/2 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார் என்றும், மது பாட்டிலுக்கு
10 ரூபாய் கூடுதல் விலை வைத்து சிறை சென்றுள்ள செந்தில்பாலாஜியை தொடர்ந்து பல திமுகவினர் சிறை செல்ல உள்ளனர் என்றும், நீட் தேர்வை அதிமுக அமைச்சர்கள் கையெழுத்திட்டு ரத்து செய்ய முயன்றபோது, அதனை நீதிமன்றத்தில் முறையிட்டு தடுத்தவர் பிரபல முன்னாள் அமைச்சரின் மனைவிதான் என்றும் குற்றம் சாட்டிய
எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சி துறையில் 140 விருதுகள் பெறறு நல்லாட்சி கொடுத்தது அதிமுக ஆட்சிதான் என்றும் கூறினார். செய்தி தொடர்பு துறையினர் ஆளும் திமுகவிற்கு துணைபோகின்றனர் என்று குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிமாற்றம் ஏற்பாட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *