• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ச‌சிகலா சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

Byமதி

Oct 17, 2021

தமிழகத்தின் ஆட்சி அதிகாரமிக்க கட்டியான, அதிமுக கட்சி தொடங்கி இன்று 50ஆவது ஆண்டில் அடிவைக்கிறது. இதனை அடுத்து அதிமுக சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அதிமுக பொன்விழாவையொட்டி சசிகலா எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றி, கல்வெட்டு திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி சசிகலா மரியாதை செலுத்தினார். மேலும் அதிமுக பொன் விழா சிறப்பு மலரையும் சசிகலா வெளியிட்டார்.

தி.நகரில் உள்ள நினைவு இல்லத்தில் பொன்விழா ஆண்டு கொடியேற்றம் நிகழ்வையொட்டி சசிகலாவின் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.