


முன்னாள் அமைச்சரும் சத்யா மூவிஸ் நிறுவனமான ஆர்.எம் வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரா கோட்டையில் உள்ள ஆர்.எம் வீரப்பனின் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் அவரது திருவுருவச் சிலைக்கும், திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் அமைச்சரும் சத்யா மூவிஸ் நிறுவனமான மறைந்த இராம வீரப்பன் என்று அழைக்கப்படும் ஆர்.எம் வீரப்பன் கடந்த ஆண்டு ஏப்ரல் ஒன்பதாம் தேதி மறைந்தார். இதனை அடுத்து அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரா கோட்டையில் அவரது நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆர் எம் வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டம் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபத்தில் அவரது குடும்பத்தினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து செலுத்தினர். மேலும்
ஆர்.எம் வீரப்பனின் வாழ்க்கை குறித்து குறும்படம் திரையிடப்பட்டது.

மேலும் வல்லத்திரா கோட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு ஆர்.எம். வீரப்பன் குறித்த குறும்படம் திரையிட்டு காட்டப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தினர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

