• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சசிகலா-ஓ.பி.எஸ் சுவரொட்டிகள் கிழிப்பு -மதுரையில் பரபரப்பு

ByA.Tamilselvan

Jun 28, 2022

மதுரையில் சிசிகலா -ஓபிஎஸ் சுவரொட்டிகள் இபிஎஸ் ஆதரவாளர்களால் கிழிக்கப்பட்டதாக பரபரப்பு புகார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே நாளுக்கு நாள் பிளவு வலுத்து வருகிறது. அ.தி.மு.க.வில் எழுந்துள்ள ஒற்றை தலைமை கோஷம் காரணமாக அந்த கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் முடிவுகளை அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை கொண்டு வரவும், பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ்.சை நீக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது
இதனை முறியடிக்க ஓ.பன்னீர்செல்வமும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கடிதம் பெறப்பட்டு வருகிறது.‌ இந்த நிலையில் மதுரை பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன‌. சசிகலா-ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
. மதுரை நகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், “அன்று சீதை வடித்த கண்ணீர் இலங்கையை அழிந்தது, இன்று சின்னம்மா வடிக்கும் கண்ணீரால் துரோகிகள் கூட்டம் ஒழியும், அம்மாவின் ஆயுதக்கிடங்கு சின்னம்மா” என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. சசிகலா படத்துடன் ஓ.பன்னீர்செல்வம் படத்தையும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் மதுரை புறநகர் பகுதிகளிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க.வில் அடுத்த கட்டமாக என்னென்ன நிகழுமோ என்று தொண்டர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்