விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பெண்களுக்கு சேலை மற்றும் விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கப்பட்டது.

இராஜபாளையம் பூபால்பட்டி தெருவில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி நகரத் தலைவர் எஸ்.கே.மகாதேவன் தலைமை வகித்தார். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் சஞ்சீவி வரவேற்றார். மாநில இணை அமைப்பாளர் பொன்னையா ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் 200 பெண்களுக்கு சேலை மற்றும் விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டன. முடிவில் நகர பொதுச்செயலாளர் சந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் குமரன் ஸ்வீட்ஸ் அதிபர் ரவிக்குமார், ரவிநெய் கடை எஸ். ஆர். வெங்கடேஷ் மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.