• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

சூரியனார் கோவிலில் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

Byகாயத்ரி

Jan 25, 2022

மயிலாடுதுறை மாவட்டம் ஆடுதுறை அடுத்து சூரியனார் கோவிலில் தை மாதம் பொங்கல் திருவிழாவையட்டி சூரியனார் கோவிலில் நடைபெறும் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கும்.

பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் சூரியனாரின் திருமணப் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சூரிய பகவான் பார்வை அளிக்கும் தெய்வமாக கருதப்படுகிறார். ஆகையால் பார்வை குன்றியர்களும், கண்நோய் உடையவர்களும் இங்கு வந்து வழிப்பட்டு பலன் பெறுகிறார்கள். அது மட்டுமல்ல முழு முதல் கடவுளாக சூரியன் இங்கே கருவறையில் அருள் பாலிக்க இது ஒரு நவக்கிரகக் கோவிலாக மலர்ந்துள்ளது.

சூரியனை சுற்றியுள்ள மற்ற எட்டு கிரகங்களான சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் (வெள்ளி) சனி, ராகு, கேது என்னும் இரு பாம்புகள் ஆகிய கிரகங்கள் சூரியனார் கோவில் வளாகத்தில் சுற்றாலயங்களாக அமைக்கப்பட்டுள்ளன. சூரியன் எதிரே உள்ள மண்டபத்தில் குதிரை நிற்கிறது. பிரகஸ்பதி என்று அழைக்கப்படும் குரு தனியாக சன்னதியில் இல்லாமல் சூரியனின் எதிரில் குதிரை வாகனத்தின் பின் நிற்கிறார்.தமிழ்நாட்டில் நவக்கிரகங்களுக்கு என்று 9 ஆலயங்கள் தனித்தனியாக உள்ளன. அங்கு மக்கள் சென்று வணங்குகின்றனர். ஆயினும் அத்தனை தலங்களையும் வழிபட்ட பயன் சூரியனார் கோவிலுக்கு சென்று வணங்கினாலே கிடைக்கிறது.

சூரியனார் கோவிலில் தை மாதத்தின் சிறப்பாக சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ராகு கேது ஆகிய தெய்வங்களுக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அருள்பாஸிப்பார்.இவ்விழாவில் சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் மிகவும் பிரசித்திப்பெற்றது.இந்நிகழ்வில் ப பக்தர்கள் கடவுளை வணங்கி ஆசிபெறுவர்.