• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Feb 15, 2022

சிறு பருப்பு குழம்பு

தேவையானவை:
பயத்தம்பருப்பு – ஒரு சிறிய கப், தக்காளி, சௌசௌ, வெங்காயம் – தலா 1, பூண்டு – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள், குழம்பு பொடி – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
சௌசௌ, தக்காளி, வெங்காயம் மூன்றையும் நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் பயத்தம்பருப்பு, தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள், வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், குழம்பு பொடி சேர்த்து… நறுக்கிய சௌசௌ, தேங்காய் துருவல், உப்பு போட்டு நன்றாக வதக்கவும். இதை, வெந்த பருப்புடன் சேர்த்துக் கொதிக்க விடவும். சௌசௌ நன்றாக வெந்ததும் இறக்கவும்.