• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கதம்ப சிறுதானிய சூப்

Byவிஷா

Aug 22, 2023

தேவையானவை:

குதிரைவாலி, வரகு ( சுயபi ), சாமை, பாசிப்பருப்பு – தலா 50 கிராம், தேங்காய்ப்பால் – ஒரு கப், பூண்டு – 4 பல், மிளகுத் தூள், உப்பு – சுவைக்கேற்ப, கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 10, சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

குதிரைவாலி உட்பட அனைத்து சிறுதானியங்களையும் கழுவி, சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும். தானியங்கள் ஊறிய தண்ணீரோடு அப்படியே அடுப்பில்வைத்து, பாசிப்பருப்பு சேர்த்து, கஞ்சிப் பதம் வரும் வரை வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, வேகவைத்த கலவையை ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு, தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும். தேவையான அளவு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.

கலோரி குறைவு என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு நிறைவான உணவு. இதில் கிடைக்கும் குளுக்கோஸ் உடலுக்கு உடனடி சக்தியைத் தரும்.