• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வத்தக்குழம்பு:

Byவிஷா

Apr 10, 2022

ஒரு சிறிய எலுமிச்சை அளவுக்குப் புளி எடுத்து உருட்டி ஊறவைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய், சின்ன வெங்காயம், பூண்டு, வடகம், சுண்ட வத்தல் என எதைப் போட்டு வைக்க விரும்புகிறோமோ அதைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணொலியை வைத்து காய்கள் அல்லது வத்தல் மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணெயை (நல்லெண்ணெய் சுவையை அதிகரிக்கும். பிற எண்ணெய்களிலும் செய்யலாம்) விட்டு தாளித்து அதில் காய்கள் அல்லது வத்தலைப் போட்டுப் பொரிக்கவும். அப்படியே அதில் தேவையான அளவு சாம்பார் பொடிபோட்டு இரண்டு நிமிடங்கள் நுரை வரும்வரை பொரிய விடவும். பின்பு அதில் ஊறவைத்த புளியைக் கரைத்து ஊற்றித் தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். ஒன்றுக்குப் பாதியாகும் அளவுக்கு நன்கு கொதித்து சுருங்கும் போது ஒரு துண்டு வெல்லம் போட்டு இறக்கி வைத்தால் சுவையான வத்தக்குழம்பு ரெடி.