தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – கால் கிலோ, பச்சை மிளகாய் – 3, கரம் மசாலா – அரை ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், சாட் மசாலா – அரை ஸ்பூன், மிளகுத்தூள் – கால் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பிரட் – 10 துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – கால் லிட்டர்.
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி, அரை ஸ்பூன் உப்பு சேர்த்து, மூடி போட்டு 4 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். பிறகு உருளைக் கிழங்கை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக உடைத்துவிட வேண்டும். பின்னர் இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியையும் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்க வேண்டும்.
பிறகு இவற்றுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்று சேர பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் பிரட் துண்டுகளை எடுத்துக் கொண்டு, அதன் ஓரங்களை வெட்டி எடுத்துவிட வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
பிறகு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பிரட் துண்டை கையில் எடுத்துக் கொண்டு, அதனை தண்ணீரில் நனைத்து கொள்ள வேண்டும். பின் பிரட் துண்டின் நடுவே பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை சிறு உருண்டையாக எடுத்து வைத்து பிரட்டை உருண்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பிரட் மசாலா ரோல் தயாராகிவிடும்.
பிரட் மசாலா ரோல்:
