• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நெல்லை – வள்ளியூர் நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா

Byதரணி

Jan 12, 2023

நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாள் தமிழக முழவதும் கொண்டாட துவங்கி உள்ளனர். ஜன.14,15 கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் முன்னோட்டமாக பள்ளி,கல்லூரிகள், நீதிமன்றகள், உள்ளிட்ட பல இடங்களில் சமத்துவபொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போலநெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சார்பு நீதிமன்ற நீதிபதி பர்ஷத் பேகம், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த், கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஆன்ஸ்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் இட்டனர். நிகழ்ச்சியில் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்