• Thu. Feb 26th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

சமந்தா, ரஷ்மிகாவை விமர்சித்த சொற்பொழிவாளர்!

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் இந்தியளவில் 5 மொழிகளில் வெளியாகி பெரியளவில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையைத்து இருக்கிறார்.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த படம் 50 நாட்களில் ரூ.365 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், புஷ்பா படத்தை பற்றி தெலுங்கு பிரபல சொற்பொழிவாளரும், இலக்கியவாதியுமான கரிகா பதி நரசிம்ம ராவ், புஷ்பா திரைப்படத்தில் நடித்த அனைவரையும் குற்றம் சாட்டி பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், குற்றம் செய்யும் ரவுடியை நல்லவனாக சித்தரித்து நடித்திருப்பது இளைஞர்கள் சமுதாயத்தை கெடுக்கும் விதாமாக அமைந்துள்ளது. மேலும் ராஷ்மிகா மந்தனா, சமந்தா எல்லைமீறிய ஆடைகளை அணிந்து ஆபாசமாக ஆடியது கொஞ்சம் கூட நன்றாகயில்லை என்றும், இப்படி காட்டித்தான் சம்பாதிக்க வேண்டுமா என்று கேள்வியும் கேட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் படம் வெளியாகி 50 நாட்களுக்கும் மேலாகியுள்ள நிலையில் இப்போது கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்!