• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சம்பளத்தை உயர்த்திய சமந்தா

Byமதி

Nov 5, 2021

நாக சைதன்யாவுடனான திருமணம் முறிந்த நிலையில், புதிய படங்களை அதிகளவில் ஒப்புக் கொள்கிறார். அவரது நடிப்பில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும், தெலுங்கில் சாகுந்தலம் படமும் தயாராகி வருகிறது.

இந்த வருடம் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் தொடர் சமந்தாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெயரை சம்பாதித்து தந்தது. இதில் ஈழப்போராளியாக ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்திய அளவில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. இதனால் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார் சமந்தா.

தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதேபோல் ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிக்கும் தெலுங்கு, தமிழ் படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார். இவை தவிர இந்திப் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.