• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சேலம் கடைவீதியில் தீபாவளியையொட்டி உச்சகட்ட விற்பனை…

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் ஆடைகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர் சேலம் கடைவீதி பகுதியில் நூற்றுக்கணக்கான சாலையோர திடீர் கடைளிலும் மற்றும் துணி கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது.

தங்களுக்கு பிடித்தமான ஆடைகளை வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். வசதிக்கேற்றவர்கள் வாங்கும் வகையில் துணி வகைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு விருப்பமான ஆடைகளை பொதுமக்கள் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் கடைவீதி பெரியகடைவீதி அக்ராகரம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் ஆடைகள் பட்டாசுகள் மற்றும் தங்களுக்கு தேவையான அலங்காரப் பொருட்களை
வாங்க பொதுமக்கள் ஆர்வம் செலுத்திவருகின்றனர்.

இதனால் அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் சேலம் கடைவீதியில் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோத கும்பல் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் காவல்துறையினர் சாதாரண உடையில் கண்காணித்து வருகின்றனர். மேலும், ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு சேலம் நகர காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறையில் காவல்துறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளில் சந்தேகத்திற்குறிய வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கூட்டம் அதிகளவில் இருப்பதால் சேலம் வீதிகளுக்கு செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வாகனங்களை திருமணிமுத்தாறு கரையோரம் நிறுத்த காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரானா தொற்று காரணமாக முடங்கிப்போன சாலையோர விபரங்கள் துணிக் கடைகளில் விற்பனை களை கட்ட தொடங்கியுள்ளது. வியாபாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.