• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரசாயன துகள்கள் கலந்த பால் விற்பனை- அரோமா நிறுவனத்தை மூடவேண்டும் -முகிலன் பேட்டி!!

ByS.Navinsanjai

Mar 15, 2023

பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் ரசாயன துகள்கள் கலந்த பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் அரோமா பால் கம்பெனியை மூட வேண்டும்…கருத்து கேட்பு கூட்டங்களில் கருத்து தெரிவிக்கும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும்…! பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் பேட்டி!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கோடங்கிபாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்தனர். அவர்களுக்கு ஆதரவாக சமூக செயற்பாட்டாளர் முகிலன் வருகை தந்திருந்தார். பல்லடம் வட்டாட்சியர் ஜெய் சிங் சிவக்குமாரை சந்தித்து மனுக்களை கொடுத்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது முகிலன் கூறுகையில் வருகின்ற மார்ச் 16ஆம் தேதி இச்சிப்பட்டியில் பாலமுருகன் கல்குவாரி இயங்குவதற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த குவாரியை ஒட்டி பிஏபி வாய்க்கால் அமைந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்த பிஏபி வாய்க்காலில் இருந்து 25 மீட்டர் தொலைவில் குவாரி அமைக்க இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் சிறு கனிம தணிக்கை சட்டம் 19 59 எல் 50 மீட்டர் தொலைவிற்கு குளம் குட்டை நீர்நிலைகள் ஏதும் இருக்கக் கூடாது என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

அரசு விதிமுறைகளை மீறி இந்த கல்குவாரி அமைய உள்ளது.இதேபோல் கடந்த பத்தாம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோடங்கிபாளையத்தில் புதிதாக அமைய உள்ள ஐந்து புதிய கல் குவாரிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் அடியாட்கள் எங்களது கருத்துக்களை சட்ட விதிகளின்படி பேச விடாமல் ரகளை செய்ததன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கருதி மாவட்ட ஆட்சியரே அந்த கருத்து கேட்க கூட்டத்தை ரத்து செய்து விட்டார்.
இந்த நாட்டில் கடைசி குடிமகன் கூட தனது கருத்தை சுதந்திரமாக வெளிப்படையாக சொல்ல வேண்டும். அதற்கு அரசு இதுபோன்ற கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும். அதற்குரிய பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.திருப்பூர் மாவட்டத்தில் கடந்தாண்டு மட்டும் மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டு பூமியின் நிலத்தட்டுக்கள் விலகிக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் காலநிலை மாற்றம் குறித்து சிறப்பு குழு அமைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறார். இந்தப் பகுதிகளில் புதிதாக கல்குவாரிகள் அமைப்பதற்கு பதிலாக எம்சாண்ட் பிசாண்ட் மாற்று மணலுக்கு மாற்றாக வெளிநாட்டில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதேபோல் கோடங்கிபாளையம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வரும் நிலையில் அதன் மத்தியில் பாறை துகள்கள், வெடி மருந்து துகள்களின் பாதிப்புடன் இயங்கி வரும் அரோமா பால் கம்பெனியை உடனடியாக மூட வேண்டும். பாலில் ரசாயன துகள்கள் கலப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் எனவே கல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது பால் கம்பெனியை மூட வேண்டும் என்றும் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.