• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்

ByKalamegam Viswanathan

Mar 28, 2023

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
ஆரப்பாளயத்தில் சந்தேகப்படும்படியாக பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரிக்கு அந்த பெண்மீது சந்தேகம் ஏற்பட்டது.அவர் அந்தப்பெண்ணிடம் விசாரித்தபோது அவர் வைத்திருந்தது பிறந்து இரண்டு நாளான பெண் குழந்தை என்று தெரிய வந்தது.அந்த குழந்தை யாருடையது என்று மேலும் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.இதனால் அவரிடம் மேலும் விசாரணை நடத்தியபோது மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பது தெரிய வந்தது.
. தன்னுடைய மகள் அழகு பாண்டியம்மாள் என்பவரது குழந்தை என கூறிய மூதாட்டி கூறிய நிலையில் அவரது மகளை அழைத்து விசாரணை நடத்திய போது, மூதாட்டி கூறியது பொய் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்தபப்பெண்ணை மருத்துவமனை போலீசிடம் ஒப்படைத்தார்.அங்கு போலீசார் நடத்திய விசாரணைய உசிலம்பட்டி காக்காரம்பட்டி ஒத்தவீடு நடுப்பட்டியை சேர்ந்த சின்னப்பாண்டி மனைவி பாண்டியம்மாள் 60,மாலதி,கருப்பசாமி மனைவி பாண்டியம்மாள் 40,இரும்பாலை நாகராஜன் மனைவி பாண்டியம்மாள்,குழந்தையின் தாய் உட்பட ஐந்துபேர் மீது வழக்குப்பதிவுசெய்தனர்.பிடிபட்ட பாண்டியம்மாள்60,அழகுபாண்டியம்மாள் 40,மற்றொரு பாண்டியம்மாள் 40,ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மாலதி மற்றும் குழந்தையின் தாயை போலீசார் தேடிவருகின்றனர்
மேலும் கடந்த சில நாட்களில் அரசு மருத்துவமனை அல்லாமல் வேறு ஏதும் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறந்துள்ளதா அதன் நிலை என்ன என்பது குறித்தும் விசாரணையும் நடத்தப்பட்டுவருகிறது.குழந்தையை பெற்றெடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வரும் கும்பலா என்பது குறித்தான சந்தேகத்துடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.குழந்தை யாருடைய குழந்தை என்பது குறித்தான விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்