கோவை சாய்பாபா காலனி பகுதியில் இருக்கும் ஸ்ரீ நாக சாயி திருக்கோவிலில் சாய்பாபாவிற்கு ருத்ராட்ச மாலை அணிவித்தும்,தங்க கிரீடத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இன்று அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

சுவாமி தரிசனம் மேற்கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சாய்பாபாவின் காலடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட பத்து ரூபாய் நோட்டு மற்றும் புகைப்படத்தை கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர்.

தொடர்ந்து காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் சாய்பாபாவிற்கு தங்க தேரை இழுத்து வலம் வந்தனர்.




