• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு

Byமதி

Dec 17, 2021

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் கிராமத்தில் திவ்யான்ஷி என்ற ஒரு வயதுடைய குழந்தை நேற்று எதிர்பாராதவிதமாக 15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியை தீவிரப்படுத்தினர். மேலும், தலைமை செயல் அதிகாரி, தாசில்தார் மற்றும் ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதற்கிடையில், குவாலியரில் இருந்து பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையை மீட்க மீட்பு குழுவினர், போலீசார், ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் 20 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் மீட்புப்படையினர் குழந்தையை பலமணிநேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவில் பத்திரமாக மீட்டனர்.