தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ‘அத்ரங்கி ரே’ என்ற இந்தி படத்தில் நடித்து கிறிஸ்மஸ் பண்டிகை ஸ்பெஷலாக ஏற்கனவே ஓடிடியில் ரிலீசானது.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷின் நடிப்பைப் பார்த்த இந்தி ரசிகர்கள் அனைவரும் பாராட்டியுள்ளார்கள். முன்னதாக இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் வெள்ளை நிற உடையில் தனுஷ் கலந்து கொண்டார்.இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆஹா ஓஹோ என்று கருத்துக்கள் தெரிவித்தனர். ஆனால் முகத்தில் ஏதோ ஒரு சோகம் இருக்கிறதே என்று ரசிகர்களிடையே ஒரு கணிப்பு இருந்தது. அதன் பின்பு தான் அப்படத்தின் ப்ரமோஷன் முடிந்ததும், ஐஸ்வர்யா உடனான பிரிவை அறிவிக்க தனுஷ் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் இந்த சோகத்தை மனதில் வைத்துக் கொண்டு தான் தனுஷ் இந்த விளம்பர நிகழ்ச்சிகளில் சிரித்து பேசி இருக்கிறார். எனவே ரசிகர்கள் அந்த வெள்ளை நிற உடை அணிந்த புகைப்படத்தை பார்த்து, அந்த சோகத்திற்கான அர்த்தம் அப்போது புரியவில்லை, ஆனால் இப்போது புரிகிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.