• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்ட சாடிவயல் யானைகள்..,

BySeenu

Oct 17, 2026

கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அமைந்துள்ள சாடிவயல் யானைகள் முகாம், பொதுமக்கள் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டது.
வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகாம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வருகை தந்த பொதுமக்கள் யானைகளை நேரில் கண்டு மகிழ்ந்தனர். யானைகளுக்கு உணவு வழங்குவதையும், அவற்றின் செயல்பாடுகளை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். யானைகளை அருகில் இருந்து பார்ப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உற்சாகமான அனுபவமாக அமைந்தது.

வன உயிரினங்களின் முக்கியத்துவம், யானைகளின் வாழ்வியல் மற்றும் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முகாம் செயல்பட உள்ளது.

இந்த முகாமை பொதுமக்கள் தினமும் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையும், வனத்துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன உயிரினங்களை நேரில் கண்டு ரசிப்பதுடன், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்த்தும் இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.