புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் ,முன்னாள் முதல்வர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களால் துவங்கப்பட்டு 54 ஆண்டுகள் நிறைவு பெற்று. 55 ஆம் ஆண்டு துவக்க விழா நாளான இன்று திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ,மாண்புமிகு முன்னாள் அமைச்சர், திண்டுக்கல் சி சீனிவாசன் அறிவுறுத்தலின்படி,

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும், கழக திண்டுக்கல் மாவட்ட மீனவர் அணி செயலாளருமான சி எஸ் ராஜமோகன் தலைமையில் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். முன்னதாக 55 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வாழ்க புரட்சித்தலைவி அம்மா வாழ்க புரட்சித் தமிழர் எடப்பாடி யார் வாழ்க என கழக தொண்டர்கள் உற்சாக கோசமிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், பகுதி கழகச் செயலாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.



