• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

காலத்தால் அழியாத ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடல் வீடியோவை இயக்கி சாதனை படைத்த சாதனா..!

‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலும், அதற்கு இடையே மூத்த நடிகரான பி.எஸ்.வீரப்பா பேசும், ‘சபாஷ் சரியான போட்டி’ என்ற வசனமும் மறையாப் புகழ் பெற்றவையாகும்.


சி.ராமச்சந்திரா இசையமைப்பில், கொத்தமங்கலம் சுப்புவின் பாடல் வரிகளில் பி.லீலா, ஜிக்கி ஆகியோர் பாடி பத்மினி, வைஜெயந்திமாலா பாலி இருவரும் நடனமாடியிருந்த இப்பாடலை தமிழகத்து மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இப்பாடலின் மறு உருவாக்க வீடியோவில், பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா பாலி ஆகிய இரு வேடங்களிலும் சாதனா நடனமாடியுள்ளார், இதுவரை யாரும் செய்யாத முயற்சி இதுவாகும்.


பிரபல வீணை மேஸ்ட்ரோ ராஜேஷ் வைத்யா ரீமாஸ்டர் செய்துள்ள இப்பாடலை சரிகமா வெளியிட்டுள்ளது. ஒளிப்பதிவை விஜய் தீபக் கையாண்டுள்ளார், சி.ஜி. விஎஃப்எக்ஸ் காட்சிகளை நாகராஜன் சக்திவேல் வடிவமைத்துள்ளார். இந்த வீடியோவை சாதனாவே இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் சரிகமா தமிழ் யூடியூப் சேனல் மற்றும் பிற ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.


காலத்தால் அழியாத பாடலுக்கு செய்யப்படும் பொருத்தமான மரியாதையாக புதிய பதிப்பு அமைந்துள்ளது.