தாம்பரம் மாநகராட்சி 63-வது வட்டம், கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதியில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட நியாய விலை அங்கன்வாடி திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். ராஜா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி நியாய விலை அங்கன்வாடியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
இந்த அங்காடி மூலம் அப்பகுதி மக்கள் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எளிதாகவும், சீராகவும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த விழாவில் தாம்பரம் மாநகராட்சி மேயர் திருமதி. வசந்தகுமாரி கமலகண்ணன், மண்டல குழு தலைவர் எஸ். இந்திரன், தலைமை கழக பேச்சாளர் வேலுமணி, மாமன்ற உறுப்பினர்கள் ஜோதிகுமார், டி.ஆர். கோபி, செ. சுரேஷ், பெரியநாயகம் மற்றும் கோமதி லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு துறை அலுவலர்கள், நியாய விலை கடை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
புதிய நியாய விலை அங்கன்வாடி தொடங்கப்பட்டதன் மூலம் நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவசியம் குறைந்து, குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் அரசு நலத்திட்டங்கள் மக்களிடம் நேரடியாக சென்றடைவதாகவும், மக்கள் நலன் அரசின் முதன்மை நோக்கமாக தொடர்வதாகவும் போது மக்கள் தெரிவித்தனர் .




