• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

உக்ரைன் மீது ரஷிய படை மீண்டும் தாக்குதல்

ByA.Tamilselvan

Oct 13, 2022

உக்ரைன் தலைநகர் கிவ் நகர் மீது ரஷ்ய படைகள் கடந்த 10ம் தேதிக்கு பிறகு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கிவ்வில் கடந்த 10-ந் தேதி ரஷிய படைகள் ஒரே நாளில் 84 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 14 பேர் பலியானார்கள். ரஷியாவின் வசமுள்ள கிரீபியா தீபகற்பத்தில் உள்ள பாலத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக கிவ் நகரில் ஆவேச தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் கிவ் நகரில் ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது. இன்று அதிகாலை கிவ் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தாக்குதல் எச்சரிக்கைக்கான சைரன் ஒலி எழுப்பப்பட்டது. உடனே மக்கள் பாதுகாப்பு இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.