தமிழ்நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர் எனும் வாக்காளர் சீர்திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது., இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.,

இதில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் வரும் ஊராட்சி செயலர்கள், கணினி ஆபரேட்டர்களும் இந்த எஸ்.ஐ.ஆர் பணிகளில் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு பங்களிக்காத அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ்குமார் வாட்ஸ் ஆப் மூலம் ஆடியோ வெளியிட்டு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.,

சார் ஆட்சியர் ஆடியோவில் பேசியது மிரட்டும் தோணியில் பேசியுள்ளதாக குற்றம் சாட்டி இன்று உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,
மேலும் சார் ஆட்சியருக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.,







; ?>)
; ?>)
; ?>)