• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ் ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்

BySeenu

Jun 27, 2024

கேரளா எர்ணாகுளம் பகுதி கல்லடா பெயர் கொண்ட ஆம்னி பஸ் நேற்று சென்னையில் இருந்து எர்ணாகுளம் செல்கிறது இந்த பேருந்தை இன்று காலை ஆர்டிஓ காந்திபுரம் பகுதியில் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து ஆம்னி பேருந்து நிர்வாகி கூறும்போது..,

எங்களிடம் உச்ச நீதிமன்ற ஆர்டர் இருக்கிறது கணியூர் டோல்கேட்டில் இருந்து ஆர்டிஓ இந்த வாகனத்தை பிடித்தார்கள் பேருந்தில் 26 பயணிகள் இருந்தனர் குறிப்பாக சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றக்கூடாது வெளி மாநிலங்கள் இருந்து தான் பயணிகளை ஏற்ற வேண்டும் எனக் கூறி வருகிறார்கள் உச்சநீதிமன்ற அறிவுரை உள்ளது எனக் கூறியும் எதுவும் பேசாமல் வாகனத்தை ஆர்டிஓ எடுத்துச் செல்லுங்கள் என கூறி வருகிறார்கள் பயணிகளும் தற்பொழுது தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் வாகனத்தில் பயணம் செய்து வருகிறார்கள் இதனால் எங்கள் வருமானம் கேள்விக்குறியாகி உள்ளது என தெரிவித்தார்.