• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினார்…

ByP.Thangapandi

Aug 15, 2024

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நூற்றாண்டு பழமை வாய்ந்த உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றினார்., முன்னதாக உசிலம்பட்டி கிராமிய கலைஞர்கள் மேல தாளம் முழங்க உசிலம்பட்டி கோட்டாச்சியரை அழைத்து வந்து தேசிய கொடியை ஏற்றும் போது உடனிருந்தனர்.

தொடர்ந்து உசிலம்பட்டி கிளை சிறையிலும், சிறை கண்காணிப்பாளர் மீர்ஷ் உசேன் உடன் இணைந்து தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.