• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் சிக்கிய ரூ. 55 ஆயிரம்..,

Byஜெ.துரை

Mar 17, 2026

எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் தாணா தெருவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் நேற்றிரவு ஈடுபட்டனர்.

அப்போது பைக்கில் புரசைவாக்கத்தைச் சேர்ந்த இர்ஷாத் அகமது என்பவரை மடக்கி சோதனை செய்தனர்.

சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 55 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், இர்ஷாத் எலக்ட்ரானிக் பொருள்களை தவணை முறையில் கொடுக்கும் தொழில் செய்து வருவது தெரிய வந்நது. பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சேத்துப்பட்டு- எழும்பூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.