• Mon. Mar 23rd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.4,68,000 பணம் பறிமுதல்..,

ByS.Ariyanayagam

Mar 23, 2026

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, அணைப்பட்டி ரோடு யூனியன் அலுவலகம் அருகே கண்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் நாகராஜன் என்பவர் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4,68,000 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் துணை தாசில்தார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் துணை தாசில்தார் ஆகியோர் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.