ரூ. 3 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறி குருவிகுளம் ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 11 வது வார்டு கவுன்சிலர் மணிமாலா சுரேஷ், 17. வது வார்டு கவுன்சிலர் ராமலட்சுமி பாண்டியராஜ், 14 வது வார்டு கவுன்சிலர் வீரலட்சுமி செல்வக்குமார், ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக கணேசன், கனகராஜ், மனோகரன், செல்வி பாலசுப்பிரமணியன், முத்துலட்சுமி கண்ணன், முத்துசாமி ஆகியோர் குருவிகுளம் ஒன்றிய குழு தலைவர் சுமார் ரூ. 3 கோடி வரை முறைகேடுகள் செய்துள்ளதாகவும் , தென் பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு ஒன்றிய குழு தலைவர் பகுதிகளில் மட்டும் பணிகள் தேர்வு செய்யப்படுவதாகவும், ஒன்றிய குழு தலைவர் தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், நிதிகள் முறையாக செலவு செய்யப்பட வில்லை என்றும், ஒன்றிய பொறியாளர் ரமேஷ் என்பவரின் ஆலோசனையின்படிதான் பணிகள் அனைத்தும் தேர்வு செய்யப்படுவதாகவும் கூறினர்.
மேலும்கவுன்சிலர் களை கலந்து கொள்ளாமலும், விவாதத்திற்கு கொண்டுவராமலும், தீர்மானங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் அரசு அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் பேசி வருவதை கண்டித்தும், வெளிநடப்பு செய்து ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக கூறி வெளிநடப்பு செய்தனர். இதனால் குருவிகுளம் யூனியன் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
ரூ. 3 கோடி முறைகேடு ? திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
