குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தது. ஆனால் அந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் திமுக வெற்று தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழகத்தில் விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறினார்.
விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை





