• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அமெரிக்காவில்2000க்கும் அதிகமான திரையரங்குகளில் RRR படம்

உலகம் முழுமையும் உள்ள சினிமா ரசிகர்கள், திரைப்பட துறையினரும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக மாறியிருக்கிறது ரத்தம் ரணம் ரெளத்திரம் பாகுபலி படத்தின் பிரம்மாண்டம், வசூல் அடிப்படையில் இந்திய சினிமாவை கடந்து சர்வதேச கவனம் பெற்ற ராஜமவுலி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்

ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆலியா பட் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் 2022 ஜனவரி 7ம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்திய திரைப்படம் ஒன்று இதுவரை வெளியாகாத அளவிற்கு அதிகமான தியேட்டர்களில் உலகம் முழுமையும் இப்படத்தை திரையிட திட்டமிடப்பட்டு வேலைகள் நடந்துவருகிறது

RRR படத்தை அமெரிக்காவில் ஐந்து மொழிகளிலும் சேர்த்து 2000க்கும் மேலான திரைகள் வரை வெளியிடப் போவதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது

தெலுங்கு பதிப்பு 1000ம், இந்தியில் பதிப்பு 800, தமிழ் பதிப்பு 300, கன்னடம், மலையாளத்தில் தலா 60 திரைகள் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு இந்தியத் திரைப்படம் அமெரிக்காவில் இவ்வளவு திரைகளில் வெளியாவது இதுவே முதல் முறை.

இதேபோன்று இந்தியா, மற்றும் அமெரிக்கா தவிர்த்து பிற நாடுகளிலும் அதிகமான திரைகளில் RRR படம் திரையிடப்பட்டு, மக்களுக்கு பிடித்த படமாக இருக்கும்பட்சத்தில் இந்திய சினிமாக்கள் வசூல் அடிப்படையில் நிகழ்த்திய சாதனைகள் முறியடித்ததென்னிந்திய படமாக இருக்கும்.