• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திருப்பதியில் நிதிஅமைச்சர் நிர்மலாசீதாராமனை சந்தித்த ஆர்.பி.உதயகுமார்

ByA.Tamilselvan

Oct 21, 2022

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  ஆர்.பி.உதயகுமார் சந்தித்தார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்றிரவு திருப்பதிக்கு வருகை தந்து ஓய்வெடுத்தார். பின்னர் இன்று காலை விஐபி தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்ற அவர், ஏழுமலையானை தரிசித்தார். ரங்கநாயக மண்டபத்தில் நிதி அமைச்சருக்கு ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் நின்றிருந்த பக்தர்களுடன் உரையாடிய அவர், சிறுவனுக்கு லட்டு வழங்கினார். முன்னதாக, கோவிலுக்கு வருகை தந்த நிதி அமைச்சரை தேவஸ்தான அரங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி வரவேற்றார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை   மரியாதை நிமித்தமாக ஆர்.பி.உதயகுமார் சந்தித்தார். இன்றைய தமிழக அரசியல் சூழலில் நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பு முக்கியதுவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.